வாய்க்கால்களில் தூர்வாரும் பணி

கொரடாச்சேரி ஒன்றியத்தில் வாய்க்கால்களில் தூர்வாரும் பணியை கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.;

Update: 2023-05-03 18:50 GMT

கொரடாச்சேரி;

கொரடாச்சேரி ஒன்றியத்தில் வாய்க்கால்களில் தூர்வாரும் பணியை கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.

தூர்வாரும் பணி

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், பெருந்தரக்குடி வாய்க்கால், எண்கண் எட்டியலூர் வாய்க்கால், பெருமாளகரம்- பழவனக்குடி ஆகிய வாய்க்கால்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணியை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான நிர்மல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பெருந்தரக்குடி வாய்க்காலில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் 14 கி.மீ தூரம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆய்வு

எண்கண் எட்டியலூர் வாய்க்காலில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் 16.50 கி.மீ தூரம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைப்போல பெருமாளகரம்- பழவனக்குடி வாய்க்காலில் ரூ.8.02 லட்சம் மதிப்பீட்டில் 6 கி.மீ தூரத்திற்கு தூர்வாரும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரான தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் நிர்மல் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வரைந்து முடிக்க அறிவுறுத்தல்

பின்னர், வாய்க்கால் தூர்வாரும் பணியினை விரைந்து முடிந்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, நன்னிலம் வட்டம் மகிழஞ்சேரி மற்றும் சலிப்பேரி ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் பார்வையிட்டார்.ஆய்வின் போது கலெக்டர் தி.சாருஸ்ரீ, பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியளர் சடையப்பன் மற்றும் பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்