சொந்த செலவில் 5-வது ஆண்டாக வாய்க்கால்களை தூர்வாரிய விவசாயிகள்
திருவெண்காடு அருகே சொந்த செலவில் 5-வது ஆண்டாக வாய்க்கால்களை விவசாயிகள் தூா்வாரினர்.;
திருவெண்காடு;
திருவெண்காடு அருகே சொந்த செலவில் 5-வது ஆண்டாக வாய்க்கால்களை விவசாயிகள் தூா்வாரினர்.
சொந்த செலவில்...
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே மணிக்கிராமம் ஊராட்சியில் ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பிரதான பாசன வாய்க்காலாக கன்னி வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்காலான பெரிய வாய்க்கால் அமைந்துள்ளது.இந்த வாய்க்கால்கள் மூலம் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விலை நிலங்களை சாகுபடி செய்து வருகின்றனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த 2 வாய்க்கால்களும் தொடர்ந்து தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் கடந்த 5-வது ஆண்டாக ஆண்டுதோறும் தங்களுடைய சொந்த பணத்தில் இருந்து 200 விவசாயிகளும் இணைந்து சிறிது சிறிதாக வாய்க்கால்களை தூர் வாரினர்.
அரசுக்கு கோரிக்கை
கடந்த ஆண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இந்த வாய்க்கால்களை தூா்வாரக்கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகிறார்கள். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகளே ஒருங்கிணைந்து வாய்க்கால்களை தூர் வாரி வருகின்றனர். இந்த ஆண்டும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் விவசாயிகள் கிராம தலைவர் அன்பழகன் தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.அதன்படி விவசாயிகள் தங்களுக்குள் ரூ.1 லட்சம் வரை வசூல் செய்து கடந்த 5 நாட்களாக கன்னி வாய்க்கால் மற்றும் பெரிய வாய்க்கால் இரண்டையும் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வரும் ஆண்டுகளிலாவது கோடை காலத்திலேயே தங்கள் பகுதியில் உள்ள 2 வாய்க்கால்களையும் பொதுப்பணித்துறை மூலம் தூர்வார வேண்டும் என மணிக்கிராமம் கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.