வடகாட்டில் வெறிச்சோடிய சாலைகள்
கோடை வெயில் அதிகரிப்பால் வடகாட்டில் சாலைகள் வெறிச்சோடியது.;
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அக்னி நட்சத்திரத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் குளிர்ச்சி நிறைந்த பானங்களை தேடி அருந்தி வருகின்றனர். வெயில் காலங்களில் கிராமப்புற பகுதிகளில் மரங்கள் அதிக அளவு இருப்பதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவது இயல்பு. ஆனால் இப்பகுதிகளில் கஜா புயலுக்கு பின்னர் எண்ணற்ற மரங்கள் காணாமல் போனதன் விளைவாக, வெயில் நேரங்களில் இப்பகுதிகளில் அனல் காற்று அதிக அளவில் வீசி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.