ஜம்பு மகரிஷி வன்னியர் பள்ளியில் தீத்தடுப்பு செயல் விளக்கம்
ஆரணி அருகே ஜம்பு மகரிஷி வன்னியர் பள்ளியில் தீத்தடுப்பு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.;
ஆரணி
ஆரணி - வந்தவாசி சாலையில் உள்ள ஜம்பு மகரிஷி வன்னியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றிய மாதிரி செயல் விளக்கம் பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தலைவர் ச.ஏழுமலை, செயலாளர் சு.ஜெயசீலன், துணைத்தலைவர் எ.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் உஷா வரவேற்றார்.
ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் படைவீரர்கள், மாணவர்களிடையே தண்ணீரில் தத்தளிப்பவர்களை எவ்வாறு உயிருடன் மீட்பது என்பது குறித்தும்,
அதேபோல் தீ விபத்து மற்றும் இடர்பாடுகள் சமயங்களில் சிக்கிக் கொள்பவர்களை வெளியே உயிருடன் மீட்பது குறித்தும் செயல் விளக்கங்களை செய்து காட்டினார்.
நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பலரும் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் ரஞ்சித் நன்றி கூறினார்.