பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

வெம்பாக்கத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்;

Update: 2022-05-28 11:33 GMT

தூசி

வெம்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் குப்பன் என்ற வெற்றிவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அம்பேத்கார், வெங்கடேசன், கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர்கள் வெங்கடேசன், பத்ராசலம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் நாக.வளவன், ஞானசேகரன், சுதாகர், சத்தியமூர்த்தி, கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர்கள் நம்பிராஜன், சதீஷ்குமார், முருகன், ஓம் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அவர்கள் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், அதன் விலையை குறைக்கக் கோரியும் கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்