கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

குடியாத்தத்தில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2022-06-23 13:29 GMT

குடியாத்தம் நகர, தாலுகா, பேரணாம்பட்டு தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குழுக்கள் சார்பில் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் நகர செயலாளர் பி.காத்தவராயன், பேரணாம்பட்டு தெற்கு செயலாளர் சி.சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநில குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு செ.ஏகலைவன், கே.ஜே.சீனிவாசன், கே.சாமிநாதன், மாவட்ட குழு பி.குணசேகரன், வீ.குபேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய ராணுவத்திற்கு இளைஞர்களைத் தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்