வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாசில்தார் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வருவாய் துறை அலுவலர் சங்க வட்ட கிளை தலைவர் அமுதன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வருவாய் துறையினர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்றிய கள்ளக்குறிச்சி வட்டாட்சிதமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.யரை தற்காலிக பணி நீக்கம் செய்த மாவட்ட கலெக்டரை கண்டித்தும், பெண் அரசு ஊழியர்களை ஒருமையில் பேசிய ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் வருவாய் துறை அலுவலர் சங்க துணை தலைவர் ராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் கார்த்திக், கண்ணன், பொருளாளர் சிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.