சாத்தான்குளத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சாத்தான்குளத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-07-29 18:45 GMT

தட்டார்மடம்:

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பெண் வன்கொடுமையை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சாத்தான்குளத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பஸ்நிலையம் காமராஜர் சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழு செயலர் வேதா தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலர் பூமயில், பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல அதிபர் வெனிஸ்குமார் ஆகியோர் பேசினர். இதில் திரளாக பெண்கள் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சித்ரா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்