காதில் பூ சுற்றி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காதில் பூ சுற்றி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-10-09 21:33 GMT

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தினர் காதில் பூ சுற்றி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இன்பராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் கென்னடி, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கேசவமூர்த்தி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தங்கவேலு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் சங்க மண்டல தலைவர் சுப்பிரமணி, தமிழ்நாடு உதவி ஆணையர் மற்றும் வணிக வரி அலுவலர் மற்றும் துணை வணிக வரி அலுவலர் சங்க துணை பொதுச்செயலாளர் மதி, தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ராமன், தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தராஜன், தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் பேசினார்கள். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது, சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியின் படி, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யாமலும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் தேர்தல் வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக முதல்-அமைச்சர் கூறிவருவதை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் காதில் பூ சுற்றி இருந்ததை அனைவரும் வேடிக்கை பார்த்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்