சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2023-09-13 19:15 GMT

சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை அனைத்து ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி கமிஷனர் சங்கரனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். இதில் 20-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பொது நிதி மற்றும் குடிநீர் நிதியில் செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு காலதாமதம் இன்றி காசோலை வழங்க வேண்டும். முடிந்த திட்டப்பணிகளுக்கு அரசு பணம் வழங்கிய பின்னரும், ஒப்பந்ததாரர்களுக்கு காசோலை வழங்குவதில் மாநகராட்சி கமிஷனர் காலதாமதம் செய்யகூடாது. டெண்டரில் வேலை கிடைக்காத பணிகளுக்குரிய டெண்டர் வைப்பு தொகை மற்றும் பில்லில் பிடித்தம் செய்த பணத்தை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்