அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பெரியகுளம் வட்ட கிளை சார்பில், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பெரியகுளம் வட்ட கிளை சார்பில், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராடிய எம்.ஆர்.பி. செவிலியர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நடவடிக்கையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.