அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

`அக்னிபத்' திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-06-20 16:54 GMT

இந்திய ராணுவத்தில், 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் `அக்னிபத்' என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதேபோல, அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் திருக்கடையூர் கடைவீதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, மாவட்ட செயலாளர் மணிபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை கையில் ஏந்தியவாறு `அக்னிபத்' திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.





Tags:    

மேலும் செய்திகள்