பதவி உயர்வுகோரி ஆர்ப்பாட்டம்

பெல் நிறுவன ஊழியர்கள் பதவி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-07-04 19:33 GMT

ராணிப்பேட்டை, 

ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஓ.பி.சி. உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கம் சார்பில் தொழிற்சாலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர். அவர்கள் கைகளில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பெல் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி ஓ.பி.சி. உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய பதவி உயர்வு மற்றும் அனைத்து வித சலுகைகளும் காலதாமதம் இல்லாமல் உடனடியாக தொழிற்சாலை நிர்வாகம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்