அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-06-07 18:45 GMT

கீழப்பழுவூர்:

திருமானூர் ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் புனிதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன், செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் கலந்து கொண்டு, கோவில் எசனை ஊராட்சிக்கு உட்பட்ட விளாகம் கிராமத்தில் ெதற்குத்தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், வீதியில் ஓடும் சாக்கடையை தடுக்க, வீதிகளின் இருபுறமும் வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டும். அனைத்து வார்டுகளில் உள்ளவர்களுக்கும் பாகுபாடின்றி 100 நாள் வேலை வழங்க வேண்டும். கீழராமநல்லூரில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் கோரிக்கை மனுவை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜிடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்