நிலத்தை ஜப்தி செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நிலத்தை ஜப்தி செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2022-06-22 20:03 GMT

மணப்பாறை, ஜூன்.23-

மணப்பாறை அருகே உள்ள கரும்புளிபட்டியை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம். இவர் டிராக்டர் வாங்கியதற்கான கடன் தொகை முழுவதையும் செலுத்தாததால் வங்கி நிர்வாகம் அவரது 11½ ஏக்கர் நிலத்தை ஜப்தி செய்தது. இதற்கு பல்வேறு விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கியை கண்டித்து மணப்பாறை பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்