வாலிபர்-மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் வாலிபர்-மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
தஞ்சை ரெயிலடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா தலைமை தாங்கினார். மாநகர துணை செயலாளர் நாகராஜ், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சந்துரு, மாவட்ட தலைவர் அர்ஜூன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த காரணத்தினால் திருச்சி காட்டூர் பகுதி அம்மாகுளம் வாலிபர் சங்க கிளைச் செயலாளர் தவ்பீக் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 15 பேர் கொண்ட கும்பலை கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.