கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சோளிங்கரில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-10-11 18:09 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா அலுவலகம் முன்பாக வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் சானு தலைமை தாங்கினார்.

அரக்கோணம், நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட இரண்டு கிராம நிர்வாக அலுவலர்களை காரணம் இன்றி பணியிட மாற்றம் செய்த கோட்டாட்சியர் கண்டித்தும் பணியிடை மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கையையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் வட்டாரத்துக்குட்பட்ட 39 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோட்டாட்சியரை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்