கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், நில அளவையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தியும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷம் எழுப்பினார்கள்.
இதேபோல் பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குடி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆலங்குடி வட்ட தலைவர் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆலங்குடி தாலுகா அலுவலக துணை தாசில்தார் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் வட்ட தலைவர் கருப்பையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.