கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-04-26 18:32 GMT

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் கொலை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் வருவாய் துறை அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம உதவியாளர் சங்கங்கள் கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் 75 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்