கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2023-03-13 18:39 GMT

சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை உடனே வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியம் மீண்டும் வழங்கிட வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை செயலாளர் தனராஜ் தலைமை தாங்கினார். இதில் கரூர் கோட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட இணை செயலாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் புகழூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமை தாங்கினாா். மாவட்ட செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்