கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிவகிரி அருகே கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-05-28 11:37 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே ராயகிரி பெரியார் பஸ் நிறுத்தத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும் நகர இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சமுத்திரம் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட பொருளாளர் சுப்பையா கலந்து கொண்டு பேசினார். தென்காசி மாவட்ட மாதர் சங்க செயலாளர் கந்தம்மாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் கோவிந்தன், மாவட்ட ஜனசக்தி பொறுப்பாளர் சமுத்திரக்கனி, சங்கரையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்