பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க. அரசைக் கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-23 18:55 GMT

தி.மு.க. அரசைக் கண்டித்து  பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஸ்வநாதபேரி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசைக் கண்டித்தும் பா.ஜ.க.வினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. விஸ்வநாதப்பேரி கிளை சார்பில், திரவுபதி அம்மன் கோவில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன் தலைமை தாங்கினார்.

விஸ்வநாதப்பேரி கேந்திர தலைவர் ராமசாமி, ஒன்றிய துணைத்தலைவர் மு.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய பிரசார பிரிவு செயலாளர் முத்துச்சாமி, ஒன்றிய முன்னாள் படைவீரர் பிரிவு ராமசாமி, ஒன்றிய ஆன்மிக பிரிவு செயலாளர் மாரியப்பன், ஒன்றிய ஓ.பி.சி. அணி செயலாளர் எம்.முத்துராஜ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் மாரியப்பன், முன்னாள் கிளை தலைவர் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயற்குழு உறுப்பினர் க.உலகநாதன் நன்றி கூறினார்.

குற்றாலம்

தென்காசி தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் குற்றாலம் பஸ் நிலையம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செந்தூர்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன் முன்னிலை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் அசோக் பாண்டியன் வரவேற்றார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை

செங்கோட்டையில் 8 இடங்களில் நகர பாரதீய ஜனதா கட்சி சார்பில் நகர தலைவர் வேம்புராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் மாரியப்பன், நகர பார்வையாளர் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் பொன்லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூர், புன்னையாபுரம், சொக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூரில் பா.ஜ.க. நகர தலைவர் சுப்பிரமணியன் தலைமையிலும், கடையநல்லூர் ஒன்றியம் புன்னையாபுரத்தில் தர்மர் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடையநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் ராமநாதன் கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கடையம்

கடையம் கிழக்கு ஒன்றியத்தில் கீழஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, ஏபிநாடானூர், ஐந்தான்கட்டளை, கோவிலுற்று ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் ரத்தினகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன், ஒன்றியபொதுச் செயலாளர்கள் முருகேசன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்