ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-08-02 18:32 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர்கள் சிவசாமி, செல்லப்பிள்ளை, சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500, பருத்தி குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம், மக்காசோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரத்து 500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் என தமிழக அரசு விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும். தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். மாட்டு தீவனம் 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்