ஆலங்குடி, பொன்னமராவதியில் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

ஆலங்குடி, பொன்னமராவதியில் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-10 18:53 GMT

தமிழ்நாடு வருவாய்துறை சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குடி தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க தலைவரும், ஆலங்குடி வருவாய்த்துறை அலுவலருமான துரைகண்ணு தலைமை தாங்கினார். இதில், கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே அறிவித்து பதவி உயர்வு வழங்கிட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பதவி உயர்வு, பட்டியல் திருத்தத்தின் காரணமாக பதவி இறக்கம் பெறும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்புக்கான ஆணைகள் விரைவில் வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதேபோல் பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாசில்தார் பிரகாஷ், மாவட்ட இணைச்செயலாளர் துரை உள்பட பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்