மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மகளிர் உரிமைத்தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்க கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 அனைத்து ஏழை, எளிய பெண்களுக்கும், ஆதிவாசி பெண்களுக்கும் வழங்க கோரி அகில இந்திய மாதர் சங்கம் சார்பில் பந்தலூர் அருகே எருமாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகி ஜெயமோள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் யசோதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பகுதி செயலாளர் ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.