மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update: 2023-09-12 20:29 GMT

சிவகாசி,

சாத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தவர் நாகலட்சுமி (வயது 23). இவரை அதே ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த டாக்டர் ரகுவீர் (33) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நர்ஸ் நாகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் டாக்டர்கள் ரகுவீர், கிருஷ்ணவேணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து ரகுவீரை மட்டும் கைது செய்தனர். இந்தநிலையில் டாக்டர் கிருஷ்ணவேணியை கைது செய்யக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவி தெய்வானை தலைமை தாங்கினார். இதில் 30 பெண்கள் உள்பட 60 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்