இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-21 18:45 GMT

கோத்தகிரி, 

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில், மலம் கலந்த குடிநீர் தொட்டியை இடிக்க கோரி போராட்டம் நடத்த திட்டமிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது செய்த காவல்துறையை கண்டித்து கோத்தகிரி மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு யோகராஜ் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். கோத்தகிரி இடைக்கமிட்டி தலைவர் சுகுந்தன் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வேங்கைவயல் கிராமத்தில் நியாயமான போராட்டம் நடத்த முடிவு செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ், வாலிபர் சங்க தாலுகா செயலாளர் பகத்சிங், பொருளாளர் சுனந்தா, மாணவர் சங்க செயலாளர் சச்சின் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்