கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-11-12 19:14 GMT

புதுக்கோட்டையில் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மன்னர் கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மண்டல தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் கிளை தலைவர் வீரமணி முன்னிலை வகித்தார். கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் நேர்காணல் முறையை தொடர்ந்து பின்பற்றி எழுத்து தேர்வு முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்