மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வனபாதுகாப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-06-27 23:30 GMT


பொள்ளாச்சி


பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய தலைவர் மணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பரமசிவம், அகில இந்திய விவசாய சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.


அப்போது வன உரிமை சட்டத்தை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கவும், அனுபவ நில பட்டாவாக பழங்குடியின மக்கள் வசித்து வரும் வீடுகளுக்கு 1 ½ சென்ட் அளவீடு பட்டா வழங்கியதை திரும்ப பெற்று, அவர்கள் பயன்படுத்தும் அனுபவ நிலம் முழுமைக்கும் வீட்டுமனை பட்டா குறைந்தபட்சம் 10 சென்ட் என வழங்க வேண்டும். வனத்தில் வாழும் மக்களுக்கு சமுதாய உரிமை வழங்கப்பட்டு, குடிநீர், மின்சாரம், பொதுகழிப்பிடம், பாதை வசதி, பள்ளி கட்டிடம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சொந்த வீடு இல்லாத பழங்குடி மக்களுக்கு கேரள அரசை போன்று ரூ.10 லட்சத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். மத்திய அரசு வனபாதுகாப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். புலையன், மலைப் புலையன் மக்களை மீண்டும் பழங்குடி மக்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


பின்னர் கோரிக்கைகள் குறித்த மனுவை சப்-கலெக்டர் பிரியங்காவிடம் வழங்கினார்கள். இதையொட்டி சப்-கலெக்டர் அலுவலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Tags:    

மேலும் செய்திகள்