அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2022-12-30 18:45 GMT

திருச்சுழி,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான பொங்கல் போனஸ் மற்றும் ஊழியர்களுக்கு கருணைத்தொகை, 4 சதவீதம் அகவிலைப்படி உடனடியாக வழங்க வலியுறுத்தி திருச்சுழி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இணை செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் துரைக்கண்ணன் மற்றும் அரசு ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன் சிறப்புரை ஆற்றினார்கள். சாலைப்பணியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் அழகுச்சாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்