திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் அணி துணை செயலாளர் குமார் தலைமை தாங்கினார். தமிழகத்தில் இயங்கும் வங்கிகளில் தமிழ் மொழி பயின்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், தமிழகத்தில் படித்து விட்டு பணிக்காக காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்காத நிலையை மத்திய அரசு உருவாக்குவதாகவும், இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.