தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

தே.மு.தி.க. சார்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2023-08-10 20:15 GMT

தே.மு.தி.க. சார்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் (மேற்கு) சிவக்குமார், (கிழக்கு) ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் அணி துணை செயலாளர் பாக்கியசெல்வராஜ் வரவேற்றார். இதில் தே.மு.தி.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் அழகர்சாமி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும். தமிழகத்துக்கு உரிய காவிரிநீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்