மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-10-10 11:58 GMT

ஆரணி

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டம் ஊதிய நிலுவையை 2 மாதங்களாக வழங்கப்படாமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்து ஆரணி தச்சூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட துணை செயலாளர் ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் சி.அப்பாசாமி, பி.கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கிராமப்புற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழைகளின் வாழ்வாதாரத்தை ஓரளவு பாதுகாத்து வரும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை ஒழித்திடவே மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிதி ஆண்டுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருகிறது.

இத்திட்டத்தில் பணியாற்றுவோருக்கு ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒன்றிய பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்