கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-10-18 18:42 GMT

நெல்லை மாவட்ட தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில், பாளையங்கோட்டையில் உள்ள இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோயில்மணி தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் முத்துராஜா முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், காலஅவகாசம் இல்லாமல் புள்ளிவிவரங்கள் கோருதல் என்ற பெயரில் மனஅழுத்தம் நிறைந்த பணிச்சூழல், தினசரி காணொலி ஆய்வுக்கூட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மருத்துவத்துறை நிர்வாக ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் மாரிவெங்கடேஷ் ஆழ்வார், தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு சங்க மாநில பொருளாளர் ஸ்டேன்லி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்