சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரம் கலெக்டரை கண்டித்து சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-10-05 18:30 GMT

பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை கண்டித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் காஞ்சீபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட்டில் இயங்கி வரும் ஜப்பான் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தமிழக தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தியதை நிறுவன தூதுவர் போல் கொச்சைப்படுத்திய மாவட்ட கலெக்டரை கண்டித்தும், வட மாநில தொழிலாளர்கள், தென்மாநில தொழிலாளர்கள் பிரித்து பேசியதை கண்டித்தும், அவரது தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், மாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்து அவரை தமிழக அரசு திரும்ப பெறக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்