அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவெண்ணெய்நல்லூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவெண்ணெய்நல்லூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update: 2022-11-01 18:45 GMT

உளுந்தூர்பேட்டை,

சென்னையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து  திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பா.ஜ.க. மாநில கூட்டுறவு பிரிவு துணை தலைவர் ஏ.ர.வேலு தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் தென்னரசு, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்