ஆவுடையார்கோவில் அருகே திருக்கல்யாணபுரம் கிராமத்தில் கல்யாணபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் இருக்கும் இடம் ஊர் பொதுவான இடம் ஆகும். இதில் மற்ற மதத்தினரும் தங்களுக்கு பங்கு உண்டு என்று கூறி வருவதால் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் பிரச்சினையின் போது கோவிலின் அருகில் ஒரு சிலுவையும், மற்றொரு புறம் முஸ்லிம் கொடியும் ஊன்றப்பட்டது. இந்நிலையில், கோவிலில் இருந்த முருகன் சன்னதியில் இருந்த வள்ளி சாமி சிலையை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். முருகன் சாமி சிலையில் கையும் உடைக்கப்பட்டது. இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சாமி சிலை திருட்டு, சிலை உடைப்பை கண்டித்து ஆவுடையார்கோவிலில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ஜ.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.