பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தணிகை அரசு முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிய பாதுகாப்பு அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தமிழக அரசு 12 மணி நேர வேலை என்ற தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயத்திற்கு பதிலாக வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.