விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்;

Update: 2022-06-03 16:38 GMT

கோவில்பட்டி:

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்திய சம்யுக்த கிசான் மோர்ஸாவின் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் தியாகத்தை பெங்களூருவில் வைத்து தாக்கிய பா.ஜனதா கட்சியினரை கண்டித்து கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட கன்வீனர் நல்லையா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் புவிராஜ், தமிழக விவசாயிகள் சங்க சரவண முத்துவேல், விவசாய சங்க செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பொருளாளர் ஜி.ராமசுப்பு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்