மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு: மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்;
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மயிலாடுதுறையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான பவுன்ராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மணக்குடி சங்கர் வரவேற்றார். தமிழக போலீசாரை தவறாக வழிநடத்தும் போக்கை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ்குமார், ஜனார்த்தனன், இளங்கோவன் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் செந்தமிழன் நன்றி கூறினார்.