அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-14 19:28 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் வடக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மான்ராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தலைமையில் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் மாவட்ட ஒன்றியகுழு தலைவர் வசந்திமான்ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சிமுருகன், ஒன்றிய கவுன்சிலர் செல்லபாண்டியன், வத்திராயிருப்பு தெற்கு ஒன்றிய செயலாளர் சேதுவர்மன், வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை தெற்கு, வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் யோகா வாசுதேவன், வடக்கு ஒன்றிய செயலாளர் போடம்பட்டி சங்கரலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சோலை சேதுபதி, இணை செயலாளர் ராஜேஸ்வரி, சிறுபான்மைபிரிவு செயலாளர் சேரன் இஸ்மாயில், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ராம்பாண்டியன், அவைத்தலைவர் அசோக்வேலுச்சாமி, கூட்டுறவு சங்க தலைவர் சங்கிலிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெம்பக்கோட்டை

வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தங்கவேலு முன்னிலை வகித்தார்.

சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முககனி, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், குகன்பாறை ஊராட்சி மன்ற தலைவர் கே.வி.கே.ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சாத்தூர்

இருக்கன்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கவுன்சிலர் இந்திரா கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் முத்துமுனியம்மாள் ராஜபாண்டியன், கவிதா கருப்பசாமி, ஒன்றிய அவைதலைவர் சோலைச்சாமி, இலக்கிய அணி செயலாளர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல சாத்தூரில் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி முன்னிலை வகித்தார். மேலும் கொள்கை பரப்பு துணைச்செயலாளர், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்