செங்கோட்டை:
சொத்துவரி, மின்கட்டணம், பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசைக் கண்டித்து, தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஆலோசனையின்படி, செங்கோட்டை அருகே புளியரை பஸ் நிறுத்தம் அருகில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய செயலாளா் செல்லப்பன் தலைமை தாங்கினார். புளியரை கிளை செயலாளா் செல்வராஜ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளா் சரவணன், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளா் கனகராஜ், மாணவரணி செயலாளா் முருகேசன், மகளிரணி செயலாளா் மாரிச்செல்வி, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் அமர்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட அவைத்தலைவா் வி.பி.மூர்த்தி, செங்கோட்டை நகர செயலாளா் கணேசன், புதூர் பேரூர் செயலாளா் பாலசுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளா் ஞானராஜ், மாவட்ட மீனவரணி செயலாளா் மீன்ஆறுமுகம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளா் ஜாகீர்உசேன், நகர இளைஞரணி செயலாளா் சக்திவேல், ஒன்றிய துணை செயலாளா் சரஸ்வதி, நகர்மன்ற உறுப்பினா்கள் முத்துப்பாண்டி, சுப்பிரமணியன், வழக்கறிஞா் ஆதிபாலசுப்பிரமணியன், கிளைச்செயலாளா்கள் கோமதிராஜா, இசக்கித்துரை, கார்த்திக், சுப்பிரமணியன், மாரியப்பன், பவுன்ராஜ், செண்பகம், மணிகண்டன், குமாரசாமி, கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பலா் கலந்து கொண்டனா். மைலப்பபுரம் கிளை செயலாளா் செல்வமாரிமுத்து நன்றி கூறினார்.