இளைஞர் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

இளைஞர் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2023-01-13 22:48 GMT

திங்கள்சந்தை:

குளச்சல் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் கவர்னரை கண்டித்து திங்கள்சந்தை பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு குளச்சல் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி தலைவர் ஜான் சவுந்தர், குருந்தன்கோடு ஊராட்சி காங்கிரஸ் செயல் தலைவர் வேணுகோபால் போற்றி, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினா். திங்கள்சந்தை பேரூராட்சி தலைவர் சுமன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்