ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-04 19:00 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தேரடி திடலில் தமிழ் தேசிய மாணவர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் விடுதலைக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் மதுபானங்களை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மக்கள் திறன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிலவன் தலைமை தாங்கினார். செல்லத்துரை பாண்டியன் முன்னிலை வகித்தார். அருள்மொழி தேவன் வரவேற்றார்.

நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல், வழக்கறிஞர் பகத்சிங், உலக தமிழ் கழகம் தலைவர் நிலவழகன், உலக தமிழர் பேரவை பொதுச் செயலாளர் தமிழரசன், இளைஞர் மாணவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாவெல், மக்கள் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் கபிலன், தமிழின விடுதலைக் கழகம் தலைவர் வேனில் மைந்தன், குருசாமி, செங்கணன், தமிழீழன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மாணவர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்