தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினா் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினா் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-04 18:45 GMT

பள்ளிபாளையம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பள்ளிபாளையம் கண்டிப்புதூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பிரபு, திருச்செங்கோடு வட்டார தலைவர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பள்ளிபாளையம் ஒன்றியத்தில் தகுதியுடைய இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மூப்பின்படி பதவி உயர்வு வழங்க வேண்டும், பதவி உயர்வு உரிமை சட்டபூர்வமாக தொடர்ந்து பாதுகாத்திட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வட்டார செயலாளர் இளையராஜா, சங்கர், கவுதமி, சத்தியமூர்த்தி, பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்