கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-05 18:45 GMT

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறையை தனியாருக்கு விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும், வீடில்லா அனைவருக்கும் வீட்டு வசதி வாரியத்தில் வீடு கிடைத்திட உத்தரவாதப்படுத்திட வேண்டும், அதிக வேலை வாய்ப்பு வழங்கும் சிறுகுறு தொழில்களை பாதுகாத்திட வேண்டும், தொழிலாளர்கள் அனைவருக்கும் 8 மணி நேர வேலை, குறைந்தபட்சம் மாதம் ரூ.26,000 சம்பளம், 60 வயதினருக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம், அரசு காலி பணிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் மோகன், பள்ளிபாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் முத்துக்குமார், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் நவீன், சி.ஐ.டி.யு. சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்