பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தேன்கனிக்கோட்டையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலகம் முன்பு பா.ஜ.க. எஸ்.டி. அணி சார்பில் யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.டி. அணியின் மாநில செயலாளர் பாப்பண்ணா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திப்பன் வரவேற்றார். இதில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நரேந்திரன், எஸ்.டி. அணி மாநில செயலாளர் சதீஷ்குமார், எஸ்.டி. அணியின் மாநில தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் வாழும் விவசாயிகள் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பயிர்கள் யானைகள், பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளால் தொடர்ந்து சேதமாகி வருகிறது. அதேபோல யானைகளால் தொடர்ந்து விவசாயிகளும், பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். சேதமான பயிர்களுக்கும், உயிர் இழப்புகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட துணை தலைவர்கள் ராமகிருஷ்ணன், சீனிவாச ரெட்டி, மாவட்ட செயலாளர்கள் பார்த்திபன், ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.