திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், திராவிடர் கழகம் சார்பில், சமூகநீதி கோரி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அறிவரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் மாணிக்கம், சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மண்டல மகளிரணி செயலாளர் இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி வனவேந்தன், மண்டல செயலாளர் பழ.பிரபு ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஒன்றிய நிர்வாகிகள் முருகேசன், தனஞ்செயன், செல்வேந்திரன், கண்மணி, தங்கராசன், ஆறுமுகம், திராவிடமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.