ஆர்ப்பாட்டம்
பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு விருதுநகர் மாவட்ட பிரதம பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் சங்க செயலாளர் முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், பால் உற்பத்தியாளர் நல சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் ஊழியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.