அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2022-12-13 18:45 GMT

மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விலைவாசி உயர்வை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் சிவகங்கையில் சிவகங்கை நகர் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. நகர் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது விலைவாசி உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் கருணாகரன், செல்வமணி, பழனிசாமி, சிவாஜி, ஸ்டீபன் அருள்சாமி, கோபி, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் இளங்கோவன், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் கோட்டையன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் வக்கீல் ராஜா மற்றும் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர் அவை தலைவர் வி.ஆர். பாண்டி நன்றி கூறினார்.

தேவகோட்டை

அதே போல் தேவகோட்டை நகர் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராமச்சந்திரன், நகர்மன்ற துணை தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்.

இதில் தேவகோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் தசரதன், வடக்கு ஒன்றிய செயலாளர் பெருவத்தி முருகன், கண்ணங்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நகர் மன்ற உறுப்பினர்கள் அகிலாகுமாரி பழனிகுமார், வடிவேல் முருகன், அய்யப்பன், ரெத்தினம், லாவண்யா, முத்தழகு மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்